பந்தர் பஹாரு,அக்டோபர் 05-
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி சரவாக், Song என்ற இடத்தில் இராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் சரவாக்கிற்கு தாம் மேற்கொண்ட வருகையின் போது சம்பந்தப்பட்ட போலீஸ்கார் கைது செய்யப்பட்டதை சரவா மாநில போலீஸ் கமிஷனர் டத்தோ மஞ்சா அட்டா தம்மிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றை திறந்து இருப்பதையும் சைபுடின் சுட்டிக்காட்டினார்.








