Oct 30, 2025
Thisaigal NewsYouTube
இந்தியர்களின் சமூகவியல் மேன்மைக்காக / மொத்தம் 30 கோடி வெள்ளியை / மித்ரா கோரும்
அரசியல்

இந்தியர்களின் சமூகவியல் மேன்மைக்காக / மொத்தம் 30 கோடி வெள்ளியை / மித்ரா கோரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 05-

இந்தியர்களின் சமூகவியல் மேன்மைக்காகவும், அவர்களை வளப்படுத்துவதற்காகவும் அரசாங்கத்திடமிருந்து மொத்தம் 30 கோடி வெள்ளியை மித்ரா கோரும் என்று அதன் தலைவர் P. பிரபாகரன் தெரிவித்தார்.

இந்தியர்களின் பொருளாதார, சமூகவியல் உருமாற்றுப்பிரிவான மித்ராவிற்கு தற்போது அரசாங்கம் வழங்கி வரும் பத்து கோடி வெள்ளி போதுமானதாக இல்லை என்று Batu எம்.பி.யான பிரபாகரன் குறிப்பிட்டார்.

மித்ராவிற்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது மூலம் இந்திய சமுதாயத்தின் மத்தியில் B40 தரப்பினரையும், பரம ஏழைகளையும் வளப்படுத்துதற்கு பயன்படுத்த முடியும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் முன்வைக்கப்படும் வேளையில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முன்னிலைப்படுத்தக்கூடிய விவகாரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

Related News