சிலாங்கூர் மாநிலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தை தாங்கள் நான்காவது முறையாக கைப்பற்ற முடியும் என்று 70 முதல் 80 விழுக்காடு நம்பிக்கை பிறந்துள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார். அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் வெற்றியை உறுதி செய்வதற்கு மலாய்க்கார வாக்காளர்களும் பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கணித்ததைத் போல சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 40 முதல் 41 தொகுதிகள் வரையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கைப்பற்றும் என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக காலை 8.24 மணியளவில் தமது மனைவி டத்தின் செரி மஸ்தியானா முஹமட் டின் மோட்டார் சைக்கிளில் வந்த அமிருடின் ஷாரி, சுங்கை துவாவில், செலாயாங் பாரு சீனப்பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.

அரசியல்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் சிலாங்கூரை தற்காத்துக் கொள்ள முடியும் - அமிருடின் ஷாரி நம்பிக்கை
Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


