Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
அரசியல்

பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

Share:

மேன்மை தங்கிய பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஸுதீன் ஷா-வை, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இன்று காலை கோலாலம்பூரிலுள்ள இஸ்தானா பேராக் அரண்மனையில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பில் பேராக் மாநிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் PERKESO மறுவாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், அந்த மையத்திற்கு பொருத்தமான பெயர் சூட்டுவது மற்றும் அதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கும் தேதி குறித்து சுல்தானிடம் ஆலோசனை பெற்றார்.

மக்களுக்கு பயனளிக்கும் இத்தகைய திட்டங்களுக்கு சுல்தான் காட்டி வரும் அக்கறைக்கும், அவர் வழங்கி வரும் ஆலோசனைகளுக்கும் அமைச்சர் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் PERKESO மற்றும் மனிதவள அமைச்சின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Related News