Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அசூர வேக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் தே
அரசியல்

அசூர வேக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் தே

Share:

கெடா, கூலிம் சட்டமன்றத் தொகுதியில் அசூர வேத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கியுள்ள பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அவாங் தெஹ் லியான் ஓங், இன்று காலையில் பட்லிஷா கிராமம் பகுதியில் மலாய் சமூகத்துடன் இணைந்து ஆஷுரா கஞ்சி உணவை தயாரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் தெஹ் லியான் ஓங் குடன் இணைந்து உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் லும் கலந்து கொண்டு, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மலாய் சமூகத்தின் மத்தியில் பக்காத்தான் ஹராப்பானுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக தெஹ் லியான் ஓங் குறிப்பிட்டார்.

பின்னர் கூலிம் Kapitol உணவகத்தில் சீன வாக்காளர்களை சந்தித்த தெஹ் லியான் ஓங், பக்காத்தான் ஹராப்பனை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை விளக்கினார். தொடர்ந்து கூலிம் வட்டாத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவிலும் தெஹ் லியான் ஓங் கலந்து கொண்டார். சிறப்பு பூஜைக்குப் பின்னர் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டதுடன் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்களை சந்தித்து பேசினார்.

இன்று வெள்ளிக்கிழமை 7 ஆவது நாளாக தாம் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு மூவின மக்களும் அளித்து வரும் ஆதரவு தமக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளது என்று தெஹ் லியான் ஓங் குறிப்பிட்டார்.

Related News

அசூர வேக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் தே | Thisaigal News