மேற்காசியப் போர் நீடிப்பதால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, மலேசிய அரசின் எரிபொருள் மானியச் சுமையை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு, போக்குவரத்து, காப்பீட்டுக் கட்டணங்கள் ஆகியன அதிகரிப்பதோடு, உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மலேசியாவால் இந்தச் சூழலைச் சமாளிக்க முடியும் என்றாலும், விலை உயர்வு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் விரிவான உத்திகள் தேவைப்படும் என அவர் வலியுறுத்தினார்.

அரசியல்
மேற்காசியப் போர் - மலேசியாவின் பொருளாதாரத் தாக்கம் குறித்து அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி விளக்கம்
Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


