கோத்தா கினபாலு, செப்டம்பர்.27-
வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட நோக்கம் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
புறநகர் தொகுதியான தஞ்சோங் அருவில் போட்டியிடுவதற்கு ஜசெக முதன்மை நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். நகர்ப் புறங்கள், ஜசெக.வின் இலக்காக இருந்த போதிலும் புற நகர்த் தொகுதிகளிலும் அது போட்டியிட நோக்கம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் போட்டியிடும் என்பதையும் அவர் கோடி காட்டினார்.