புத்ராஜெயா, டிசம்பர்.05-
விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் இடம் பெறவிருக்கின்றவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது, மடானி அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்களுடன் விவாதித்து வருகிறார்.
அமைச்சரவை மாற்றத்திற்கான பெயர்ப் பட்டியலை அறிவிப்பதற்கு முன்னதாக காலியாக உள்ள இடங்களில் நிரப்புவதற்குப் பொருத்தமானவர்கள் குறித்து உறுப்புக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் விவாதித்து வருகிறார்.
எனினும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் நியமனமானது, பிரதமரின் தனிப்பட்ட அதிகாரம் என்றாலும் மடானி அரசாங்கத்தில் உறுப்புக் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கண்டறிவது மிக முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








