கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் இருந்ததைத் போல இந்த முறை சிலாங்கூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய கோட்டை அல்ல என்று சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசாரும், மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டத்தோ செரி மொஹமாட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலம் மீண்டும் பக்காத்தான் ஹராப்பானுக்கா? அல்லது பெரிக்காத்தான் நேஷனலுக்காக என்று துல்லியமாக கணிக்க முடியாத அளவிற்கு இந்த முறை சிலாங்கூர் மாநில தேர்தல் கடுமையாக அமைந்துள்ளதாக அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்டம் கண்டுள்ளது என்பதுதான் நடப்பு உண்மை. சிலாங்கூரை ஊடுருவ முடியும் என்ற புதிய நம்பிக்கை, இந்த முறை பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு துளிர் விட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தை முன்னெடுத்த அம்னோ ஜாம்பான்கள் தற்போது பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் இருப்பதால் எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக உலு கிள்ளான் சட்டமன்ற்த தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லியிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


