கோத்தா கினபாலு, டிசம்பர்.16-
சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதைத் தொடர்ந்து கினபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஆஆள் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் ஆளும் ஜிஆர்எஸ் கட்சி போட்டியிடுவதற்கான சாத்தியம் இருக்காது என்று அந்தக் கூட்டணியின் தலைவரும், சபா முதலமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் Datuk Seri கோடி காட்டியுள்ளார்.
இந்த இரண்டு தொகுதிகளும் அம்னோ வெற்றிப் பெற்ற தொகுதிகள் என்பதால் பாரிசான் நேஷனலுக்கு வழிவிடும் வகையில் ஜிஆர்எஸ் போட்டியிடாது என்று ஹஜிஜி தெரிவித்துள்ளார்.
இவ்விரண்டு தொகுதிகளிலும் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ஏக காலத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் இன்று அறிவித்துள்ளது.








