Oct 25, 2025
Thisaigal NewsYouTube
ஒன்றரை மாத ஊதியத்தை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க உள்ளது
அரசியல்

ஒன்றரை மாத ஊதியத்தை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க உள்ளது

Share:

பகாங், நவ. 29-

பகாங் மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஒன்றரை மாத ஊதியத்தை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க உள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் Datuk Seri Wan Rosdy Wan Ismail, பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.

இந்த ஊக்கத் தொகை மொத்தம் 33.3 மில்லியன் ரிங்கிட் ஆகும். அரசு ஊழியர்களின் சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையிலும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தஇந்த போனஸதுவதற்காகவும் வழங்கப்படுகிறது என்று Wan Rosdy கூறினார்.

அத்துடன், மத்திய அரசின் புதிய ஊதிய அமைப்பை பகாங் மாநில அரசும் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். இந்தப் புதிய ஊதிய அமைப்பின்படி, அரசு ஊழியர்களுக்கு 15 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும். இதில் 8 விழுக்காடு உயர்வு இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 7 விழுக்காடு உயர்வு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் புதிய ஊதிய அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசு 55.014 மில்லியன் ரிங்கிட் செலவிட வேண்டியிருக்கும். குவாந்தான் நகராட்சி, ஜெரந்தூட் மாவட்ட மன்றம் ஆகியவை 2024 ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை வென்றதற்காக Wan Rosdy தனது வாழ்த்துகளையும் பதிவு செய்தார்.

Related News