கோத்தா ராஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ் சம்புநாதன், தமது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். டிஏபி சார்பில் கோத்தா கெமுனிங்கில் நிறுத்தப்பட்டுள்ள புதிய முகமான பிரகாஷ் சம்புநாதன், இத்தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். 42 வயதான பிரகாஷ் சம்புநாதன் நீண்ட காலமாகவே சமூக நலன் சார்ந்த திட்டங்களை தம்மை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சமூக தன்னார்வலர் ஆவார். மக்களின் நல்வாழ்வுக்காக பல்லின மக்களிடையே அவர் கொண்டுள்ள அணுக்கமான தொடர்பு, உதவும் மனப்பான்மை, மக்களின் சேவைக்கு அதீத முக்கியத்துவம் போன்ற குணாதிசயங்கள் அவரை ஒரு வலிமை மிகுந்த வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பான் சார்பில் கோத்தா கெமுனிங்கில் களம் இறக்குவதற்கு வழிவகுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கும் பிரகாஷ் சம்புநாதனுக்கு கோத்தா கெமுனிங் கை சேர்ந்த மூவின மக்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருவது அவரை உற்சாகப்படுத்தியுள்ளது.

Related News

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!


