பினாங்கு , ஜூலை 15
பினாங்கு மாநிலத்தின் DAP- யின் முன்னாள் அரசியல் கொறடாவான Teoh Teik Huat காலமானார். அவருக்கு வயது 77.
சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த Teoh Teik Huat, ஆஸ்திரேலியா, Perth நகரில் நேற்று காலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Teoh Teik Huat, / பிகேஆர் கட்சியில் இணைவதற்கு முன்னதாக கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரையில் டிஏபி- யின் புக்கிட் பெண்டெற நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
அதேவேளையில் 1982 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரையில்பெங்களான் கோத்தா சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
டிஏபி-- யின் வலிமைக்கு பெரும் துணையாக இருந்த Teoh Teik Huat மறைவு குறித்து பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.
ஒரு தொகுதியில் மக்களுக்கு எத்தகைய சேவையை வழங்க வேண்டும், தொகுதி பராமரிப்பு என்றால் என்ன?, அரசியல் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும் முதலிய நுணுக்கங்களை Teoh Teik Huat – டிடமிருந்து தாம் கற்றுக் கொண்டதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ்தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.








