கோத்தா கினபாலு, செப்டம்பர்.27-
வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான வாரிசான் கட்சி, பாரிசான் நேஷனலுடன் அரசியல் ஒத்துழைப்பு கொள்ளப் போவதாகக் கூறப்படுவதை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஷாபி அப்டால் மறுத்தார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான வாரிசான் கட்சி 73 தொகுதிகளிலும் தன்னிச்சையாகப் போட்டியிடுமே தவிர எந்தவொரு கட்சியுடனும் கைக்கோர்க்காது என்று ஷாபி அப்டால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வாரிசான் கட்சியுடன் இணைந்து போட்டியிட யார் வேண்டுமானாலும் ஆர்வப்படலாம். ஆனால் கட்சியின் உச்சமன்றம், இரண்டு முறை கூடியதில் கட்சி தன்னிச்சையாக போட்டியிடுவதே சிறந்தது என்று முடிவு எடுக்கப்பட்டதாக சபாவில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக விளங்கும் ஷாபி அப்டால் குறிப்பிட்டார்.