சுங்கை பக்காப், ஜூன் 22-
வரும் ஜுலை 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பினாங்கு சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அத்தொகுதியை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக தேசிய விவகாரங்கள், பிரச்சார யுக்தியாக பயன்படுத்தப்படும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை எதிர்கொள்வதற்கு தேசிய விவகாரங்கள், பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுங்கை பக்காப் சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலையில் நிபோங் தெபால், டெவான் செர்பாகுனா ஜாவி மண்டபத்தில் நடைபெற்ற போது பாஸ் கட்சி வேட்பாளருக்கு தனது ஆதரவை நல்குதற்கு வந்திருந்த ஹாடி அவாங், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி அரிஃபின்- க்கும், பாஸ் வேட்பாளர் ஆபிதீன் இஸ்மாயில்- க்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.








