Oct 23, 2025
Thisaigal NewsYouTube
மக்களாட்சி கொள்கையை நிலைநாட்ட பிகேஆர் கட்சியின் தெர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் ! – அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து
அரசியல்

மக்களாட்சி கொள்கையை நிலைநாட்ட பிகேஆர் கட்சியின் தெர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் ! – அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து

Share:

டிச. 15-

பிகேஆர் கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தை எளிதாக்குவதற்காக கட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று பிரதமரும் PKR கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், இன்று வலியுறுத்தினார். இன்று ஷா அலாம் நடைபெற்ற PKR கட்சியின் சிறப்பு தேசிய மாநாட்டில் அவர் ஆற்றிய நிறைவுரையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
கட்சியின் தலைமைத்துவத்தில் புதிய தலைவர்களும் பழைய தலைவர்களும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதே சமயம், இளைஞர் தலைவர்கள் அதிகாரம் கிடைத்தவுடன் அவசரப்படக்கூடாது, ஏனெனில் கடந்த காலத்தில் நம் தலைவர்கள் எவ்வாறு அவமதிக்கப்பட்டனர், ஒடுக்கப்பட்டனர், நாட்டுக்கு எதிரிகள் என்று கருதப்பட்டனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்களின் போராட்டமே இன்று PKR வலுவாக இருக்க காரணம் என்றார்.

கட்சியின் சட்ட திருத்தங்கள் குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின் மூலம் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டதாக அன்வர் குறிப்பிட்டார்.

அதே உரையில், எதிர்க்கட்சியின் உணர்வுகளில் சிக்கி, மக்களின் பணத்தை மில்லியன் கணக்கில் திருடியவர்களுக்கு இரக்கம் காட்டிய PKR-ன் சில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலை அவர் கண்டித்தார்.

PKR தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் , Batu Puteh விவகாரத்தில் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கத் தவறியது போன்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு உண்மைகளுடன் பதிலளிக்க வேண்டும். மேலும், மலாய் சமூகமும் இஸ்லாம் அமயமும் ஆபத்தில் உள்ளது என்ற மேலோட்டமான உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்கு பதிலாக, மக்களின் பணத்தை மில்லியன் கணக்கில் திருடியவர்கள் மட்டுமே மடானி அரசாங்கத்தின் கீழ் ஆபத்தில் உள்ளனர் என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.

Related News