Aug 1, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் சுனாமி: மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நெகிரி செம்பிலானைக் கைப்பற்றியது பாரிசான் நேஷனல் - பெரிக்காத்தான் கூட்டணி
அரசியல்

அரசியல் சுனாமி: மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நெகிரி செம்பிலானைக் கைப்பற்றியது பாரிசான் நேஷனல் - பெரிக்காத்தான் கூட்டணி

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.01-

அரசியல் சுனாமி: மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நெகிரி செம்பிலானைக் கைப்பற்றியது பாரிசான் நேஷனல் - பெரிக்காத்தான் கூட்டணி

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் களம், அதிரடித் திருப்புமுனையைச் சந்தித்துள்ளது! மொத்தம் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில், யாரும் எதிர்பாராத வண்ணம் 25 இடங்களை கைப்பற்றி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் மகா கூட்டணி.

ஆட்சி அமைக்க 24 இடங்களே தேவை என்ற இலக்கை உடைத்தெறிந்து, 25 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, ஜனநாயகச் செயல் கட்சியான ஜசெக.வை வீழ்த்த முடியாத இரும்புக் கோட்டைகளாகக் கருதப்பட்ட அதன் பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக்கின் சென்னா (Chennah) மற்றும் ரெப்பா (Repah) ஆகிய தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியுள்ளது.

ஜசெகவின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கின் பழைய தொகுதியான Chennah- வை தாங்கள் அதிரடியாக மீட்டெடுத்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ரப் வாஜ்டி டுசுகி முழங்கியுள்ளார்.

லிங்கி தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கிய நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண், பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ முகமட் பைசால் ரம்லியிடம் தோல்விக் கண்டார்.

இத்தேர்தலில் கோத்தா, கிம்மாஸ், பிலா, பாகான் பினாங், பாலோங், ரந்தாவ், செம்போங், பெர்த்தாங், சுங்கை லூய், லிங்கி, கெமஞ்சே முதலிய தொகுதிகள் அனைத்திலும் எதிரணிகளைப் புறந்தள்ளி பாரிசான் நேஷனல் - பெரிக்காத்தான் வேட்பாளர்கள் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

அம்பாங்கான் தொகுதியில் 9,300-க்கும் அதிகமான வாக்குகளையும், செர்திங் தொகுதியில் 12,100-க்கும் அதிகமான வாக்குகளையும் குவித்து, அசுர வேகத்தில் இக்கூட்டணி வெற்றி பெற்றது. ஜசெகவின் பலம் வாய்ந்த கோட்டையான புக்கிட் கெப்பாயங்கில் இவ்விரு கூட்டணியும் ஊடுருவ முடியவில்லை. அத்தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் நிக்கோல் டான் 20 ஆயிரத்து 220 வாக்குகள் பெற்று தற்காத்துக் கொண்டார்.

நெகிரி செம்பிலானில் புதிய ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை உறுதியானதைத் தொடர்ந்து மாநில பாரிசான் நேஷனல் தலைமையகம் அதிரும் வகையில் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் ஆகியோர் வந்திறங்கினார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் இடிமுழக்கக் கோஷங்களும், வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

Related News

மூன்று  தொகுதிகளில் இந்தியர்கள் வெற்றி

மூன்று தொகுதிகளில் இந்தியர்கள் வெற்றி

இன அரசியலால் வீழ்ந்தோம்: நெகிரி செம்பிலான் தோல்வி குறித்து பக்காத்தான் ஹராப்பான் பகிரங்க அறிக்கை

இன அரசியலால் வீழ்ந்தோம்: நெகிரி செம்பிலான் தோல்வி குறித்து பக்காத்தான் ஹராப்பான் பகிரங்க அறிக்கை

அடுத்த அதிரடி: மலாக்கா தேர்தலிலும் நீடிக்கும் பாரிசான் - பெரிக்காத்தான் மகா கூட்டணி! ஜாஹிட் ஹமிடி அதிரடி அறிவிப்பு

அடுத்த அதிரடி: மலாக்கா தேர்தலிலும் நீடிக்கும் பாரிசான் - பெரிக்காத்தான் மகா கூட்டணி! ஜாஹிட் ஹமிடி அதிரடி அறிவிப்பு

குடியுரிமை கிடைக்க நீண்ட காத்திருப்பு: 88 வயது மூதாட்டி டாக்சியில் தனியாக வந்து நெகிழ்ச்சியுடன் வாக்களிப்பு

குடியுரிமை கிடைக்க நீண்ட காத்திருப்பு: 88 வயது மூதாட்டி டாக்சியில் தனியாக வந்து நெகிழ்ச்சியுடன் வாக்களிப்பு

வாக்குச் சாவடிக்குள் கட்சியின் பிரச்சாரப் பொருள்: ஜெராம் பாடாங் பக்காத்தான் வேட்பாளர் அதிகாரப்பூர்வப் புகார்

வாக்குச் சாவடிக்குள் கட்சியின் பிரச்சாரப் பொருள்: ஜெராம் பாடாங் பக்காத்தான் வேட்பாளர் அதிகாரப்பூர்வப் புகார்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம் விறுவிறுப்பு: புதுமணத் தம்பதிகள் முதல் 92 வயது மூத்த வாக்காளர் வரை வாக்குப்பதிவு - 2 மணி நிலவரப்படி 51.58% வாக்குகள் பதிவு

நெகிரி செம்பிலான் தேர்தல் களம் விறுவிறுப்பு: புதுமணத் தம்பதிகள் முதல் 92 வயது மூத்த வாக்காளர் வரை வாக்குப்பதிவு - 2 மணி நிலவரப்படி 51.58% வாக்குகள் பதிவு