Sep 24, 2026
Thisaigal NewsYouTube
எஃப்ஏஎம் தலைவர் பதவி: இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என பகாங் சுல்தான் அறிவுறுத்தல்
அரசியல்

எஃப்ஏஎம் தலைவர் பதவி: இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என பகாங் சுல்தான் அறிவுறுத்தல்

Share:

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மலேசியப் கால்பந்துச் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில், அதன் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்பதை பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தேசிய மாற்றுப்பாதைக் சைக்கிளோட்டப் போட்டியைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பகாங் சுல்தான், தாம் ஏற்கனவே இப்பதவியை வகித்த பழைய நபர் என்பதால், நாட்டின் முதன்மை விளையாட்டு அமைப்பின் உயரிய பொறுப்பிற்கு இளம் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஃபீபா ஒழுங்குமுறை விதிமீறல் விவகாரத்தைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் எஃப்ஏஎம்-இன் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த புதிய தேர்தல் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News