கோலாலம்பூர், டிச.2-
கடந்த ஜுன் மாதம் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட புடி மடானி திட்டத்தின் வாயிலாக தீபகற்ப மலேசியாவில் டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகை அமலாக்க நடவடிக்கையின் வாயிலாக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 600 மில்லியன் ரிங்கிட்டை சேமித்து வருவதாக நிதித்துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள இதர துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அதிகமான நிதி வளங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு டீசல் உதவித் தொகைக்குரிய திட்டத்தில் பணத்தை மீதப்படுத்துவது ஒருமுக்கிய நடவடிக்கையாகும் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது லிம் ஹுய் யிங் இவ்விவரத்தை வெளியிட்டார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு குறிப்பாக பொது கட்டமைப்பு, சுகாதார கவனிப்பு, கல்வி, மருத்துமனை மற்றும் பள்ளிகள் முதலியவற்றின் வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த நிதி மிக முக்கியமானதாகும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
தவிர 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிகையில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சும்பாங்கான துனாய் ரஹ்மா Rahman எனப்படும் STR நிதி உதவிக்கான ஒதுக்கீட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.








