கோலாலம்பூர், அக்டோபர்.31-
கடல் எல்லைகளில் ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் போல, கண்களுக்குத் தெரியாத டிஜிட்டல் அச்சுறுத்தல்களும் மிகவும் ஆபத்தானவை என மலேசியத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்று வரும், 19-வது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிராந்திய பாதுகாப்பை உறுதிச் செய்ய டிஜிட்டல் துறைக்கும் சம அளவு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தென் சீனா கடற்பகுதியில், அச்சுறுத்தல்கள் இருப்பது நமக்குத் தெரியும், ஆனால் நமது டிஜிட்டல் துறையும் அதே அளவு அபாயத்தில் இருப்பதை உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலம், கடல் அல்லது இணையம் இவற்றில் எதுவாக இருந்தாலும் அதற்கான பாதுகாப்பில் கவனக்குறைவாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள காலிட் நோர்டின், அவற்றைப் பாதுகாப்பதில் முதலீடு செய்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.








