Nov 1, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு
அரசியல்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.31-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவிருக்கிறது.

1எம்டிபி என்று சுருங்க அழைக்கப்படும் 1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட்டுக்குச் சொந்தமான 2.28 பில்லியன் ரிங்கிட்டை, நாட்டின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற முறையில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அப்பணத்தை முறைகேடு புரிந்ததாக நான்கு குற்றச்சாட்டுகளும், சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டதாக 21 குற்றச்சாட்டுகளும் நஜீப்பிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது.

கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் வரும் டிசம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்படவிருப்பதாக தற்போது அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று இருக்கும், இவ்வழக்கின் உயர் நீதிமன்ற விசாரணை நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுஎரா இன்று அறிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி, மொத்தம் 235 நாட்கள் நடைபெற்ற இவ்வழக்கில் அரசு தரப்பில் 58 பேரும், நஜீப் தரப்பில் 26 பேரும் சாட்சியம் அளித்தனர்.

Related News