மலேசிய அரசியலின் அடிப்படை கட்டமைப்பாக பெரிக்காத்தான் நேஷனல் விளங்கப்போகிறது என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.
பெரிக்காத்தான் நேஷனல் நாட்டின் அரசியல் அடிப்படையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது என்பதை கடந்த வாரம் நடைபெற்ற 6 மாநிலங்களுக்கானசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனலின் பலம் அதிகரித்துள்ள வேளையில் மத்திய அரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்பு பலவீனமாக மாறி வருவதாக அவர் குறிப்பிட்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் அதிக ஆதரவை பெரிக்காத்தான் நேஷனல் பெற்றுள்ளது என்பதற்கு அவர்களின் ஆதரவு விகிதமே சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மொத்தம் 245 தொகுதிகளில் 146 இடங்களை பெரிக்காத்தான் நேஷனல் வென்றுள்ளது. இதில் பாஸ் கட்சி மட்டும் 105 இடங்களையும், பெர்சத்து 40 இடங்களையும் கெராக்கான் ஓர் இடத்தையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதில் பக்காத்ததான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
மலாய்க்காரர்கள் மற்றம் பூமிபுத்ராக்களின் அபரிமித ஆதரவை பெற்றுள்ள பெரிக்காத்தான் நேஷனல் மட்டுமே தேசிய அரசியல் நீரோடையில் சோபிக்கக்கூடிய ஒரு வலுவான கூட்டணியாக மாறப் போகிறது என்று ஹாடி அவாங் குறிப்பிட்டார்.

அரசியல்
மலேசிய அரசியலின் அடைப்படை பெரிக்காத்தான் நேஷனல் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் கூறுகிறார்
Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


