Jun 26, 2026
Thisaigal NewsYouTube
சபா தேர்தலில் கிடைத்த பாடம்: இளைஞர் மனதை வெல்லத் தவறிய தேசிய முன்னணி! எச்சரிக்கை மணி அடித்த ஜொஹாரி
அரசியல்

சபா தேர்தலில் கிடைத்த பாடம்: இளைஞர் மனதை வெல்லத் தவறிய தேசிய முன்னணி! எச்சரிக்கை மணி அடித்த ஜொஹாரி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.30-

தேசிய முன்னணி தனது பாரம்பரியத் தொகுதிகளில் அடைந்த தோல்வியானது, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கட்சிக்கு ஒரு முக்கியமானப் பாடமாக அமைய வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி வலியுறுத்தியுள்ளார். சபா தேர்தலில், அம்னோவின் முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், புத்துயிர் பெறக் கட்சி மிகக் கடுமையாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை ஜொஹாரி சுட்டிக் காட்டினர்.

அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசிய முன்னணி, கட்சிக்கு விசுவாசம் குறைவாக உள்ள, தங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தலைவர்களைத் தேடும் இளைய வாக்காளர்களின் சிந்தனை மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார். இளைய வாக்காளர்களின் சிந்தனையைத் திறம்படப் புரிந்து கொண்டு, உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் திறனை அவர்களுக்கு வழங்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஜொஹாரி கருத்து தெரிவித்தார்.

Related News

சபா தேர்தலில் கிடைத்த பாடம்: இளைஞர் மனதை வெல்லத் தவறிய தே... | Thisaigal News