கோலாலம்பூர், அக்டோபர்.23-
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்க மாட்டார் என்பதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இரவு உறுதிப்படுத்தினார்.
என்றாலும், புடினுக்குப் பதிலாக துணைப்பிரதமர் அலேக்ஸண்டர் நோவாக் பங்கேற்பார் என்றும் அன்வார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வரும் அக்டோபர் 26 முதல் 28-ஆம் தேதி வரையில், மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், எல்லை தாண்டிய இணைய மோசடிகள், இம்மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்றும், இதனை எதிர்கொள்ள ஆசியான் நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை வலுப்படுத்தப் போவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.