சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இந்தியர்களின் பிரதிநிதியாக பிகேஆர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இடம் பெற வேண்டும் என்று கோத்தா ராஜா பிகேஆர் தொகுதியின் இளைஞர் பிரிவு தலைவர் ராய் எஸ்.ஞானேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி நியாயப்படி பிகேஆர் கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர டிஏபி-க்கு அல்ல என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஞானேஸ்வரன் கேட்டு கொண்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி பிகேஆர் கட்சி சார்பில் சேவியர் ஜெயக்குமார்க்கு வழங்கப்பட்டது.
அப்பதவி 2013 ஆம் ஆண்டில் டிஏபிக்கு வழங்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு அப்பதவி பிகேஆர் -க்கு வழங்கப்படும் என்று டிஏபி தலைவர்கள் உத்தரவாதம் அளித்தனர்.
ஆனால் அப்பதவி, இரண்டாவது முறையாக டிஏபிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அப்பதவி பிகேஆர் கட்சிக்கு வழங்குவதே நியாயமாகும் என்று ஞானேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


