கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் “மலாய்க்காரர் ” தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிராகப் பினாங்கில் பாஸ் உறுப்பினர்களிடமிருந்து மேலும் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.
பாயான் லெப்பாஸ், பாஸ் கட்சி உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நேசனல் உறுப்புக்கட்சித் தலைவரான டொமினிக் லாவ் விற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டொமினிக் லாவ் பாயான் லெப் பாஸ் தொகுதியில் போட்டியிட்டால் அவரைப் புறக்கணிப்பதாக பாஸ் உறுப்பினர்கள் அச்சுறுத்தினர்.
கடந்த 12 ஆவது பொதுத் தேர்தலிலிருந்து பாயான் லெப்பாஸ், பாஸ் கட்சித் தொகுதியாக இருந்து வருவதாகவும், அங்குள்ள வாக்காளர்கள் ஒரு மலாய் வேட்பாளரை விரும்புவதாகவும் கிளைத் தலைவர்கள் ஒர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தனர்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கெராக்கானின் தோல்வியை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
