கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு தலைமையேற்ற துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், அன்றைய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் அம்னோவின் பதிவை ரத்து செய்வதற்கான சதித்திட்டத்தை கொண்டிருந்தனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தினார்.
மகாதீர்,முகைதீன் ஆகியோரின் இந்த திட்டத்தை தாமும், டிஏபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங்கும், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபுவும் கடுமையாக எதிர்த்ததாக அன்வார் விளக்கினார்.அம்னோவுடன் தமக்கு மனக்கசப்பு இருந்தாலும், மலாய்க்காரர்களின் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டுள்ள அம்னோவிற்கு சமாதி கட்டுவதற்கு மகாதீரும், முகைதீனும் போட்டிருந்த கணக்கை தாங்கள் வெற்றிகரமாக முறியடித்ததாக கெடா, குருன்னில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில் ஆற்றிய உரையில் அன்வார் இதனை அம்பலப்படுத்தினார்.
அம்னோவுன் பிரச்னை இருக்கலாம். ஆனால், அதன் பதிவை ரத்து செய்வது நடப்பு பிரச்னைக்கு தீர்வாகாது என்பதில் தாம் உறுதியாக இருந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


