Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்
அரசியல்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

Share:

இனவாத அரசியல் மூலம் மக்களைப் பிரிக்க நினைப்பவர்களை வாக்காளர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஸ்கூடாய் தொகுதியில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலன் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ஒருவர் மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு விடுத்திருக்கும் கோரிக்கை, நாட்டின் எதிர்காலத்திற்கு எதிரானது என கார்த்தியாயினி கடுமையாகச் சாடியுள்ளார்.

அரசியல்வாதிகள் தங்களின் திட்டங்களும், தீர்வுகளும் தீர்ந்து போகும் போதே இத்தகைய இனவாத அட்டையைத் கையில் எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கியிருந்தால், நாட்டின் எதிர்காலம் இத்தகைய குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். தலைவர்களை அவர்களின் நேர்மை, தகுதி மற்றும் சேவை மனப்பான்மையைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டுமே தவிர, இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் அல்ல என்று கார்த்தியாயினி குறிப்பிட்டார்.

வாழ்க்கைச் செலவினக் குறைப்பு, சிறந்த கல்வி, தரமான வேலைவாய்ப்பு மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை குறித்தே நமது தேர்தல் பிரச்சாரங்கள் அமைய வேண்டும். இனவாத அரசியலை முழுமையாக நிராகரித்து, மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கார்த்தியாயின் வலியுறுத்தினார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு இராணுவம், போலீஸூக்கு அன்வார் உருக்கமான வேண்டுகோள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு இராணுவம், போலீஸூக்கு அன்வார் உருக்கமான வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்:  அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்: அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து