Jan 20, 2026
Thisaigal NewsYouTube
வறுமையில் வாழ்ந்தால்தான் வறுமையை புரிந்துகொள்ள முடியும் என்பதில்லை ஹசான் கரீம் பதிலடி
அரசியல்

வறுமையில் வாழ்ந்தால்தான் வறுமையை புரிந்துகொள்ள முடியும் என்பதில்லை ஹசான் கரீம் பதிலடி

Share:

ஒரு தலைவர் என்பவர், வறுமையைப் புரிந்துகொள்வதற்கும், அப்பிரச்னையை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்கும், அவர் வறுமையில் வாழ்ந்த அனுபவத்தை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் தெரிவித்தார்.

மாறாக, மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஓர் உன்னதாம எண்ணத்தைக் கோண்டிருதாலே போதும் என்று ஏழ்மையைப் பற்றி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதுவும் தெரியாது என கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் கூறியதைத் தொடர்ந்து ஹசன் கரீம் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், தாங்களாகவே வறுமையை சந்திக்காவிட்டாலும், ஏழைகளுக்கு உதவ முயன்ற பல தலைவர்களை ஹசன் கரீம் உதாரணம் காட்டினார்.

Related News