Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்கத்தான் நேஷனல் பதிவு ரத்து செய்யப்படவில்லை – RoS விளக்கம்
அரசியல்

பெரிக்கத்தான் நேஷனல் பதிவு ரத்து செய்யப்படவில்லை – RoS விளக்கம்

Share:

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு எதிராக சங்கங்களின் பதிவிலாகாவான ஆர்ோஎஸ் (RoS) அனுப்பியுள்ள நோட்டீஸ், கூட்டணியின் பதிவை ரத்து செய்வதற்கான முடிவு அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்ஓஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணிக்கு எதிராக பெர்சாத்து கட்சி அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு மட்டுமே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 1966-ஆம் ஆண்டின் சங்கங்கள் சட்டம் 832, பிரிவு 13(2)-ன் கீழ் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகவும், பதிலளிக்க பெரிக்கத்தான் நேஷனலுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெரிக்கத்தான் நேஷனலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற பெரிக்கத்தான் உச்ச மன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சி சேர்க்கப்படவில்லை என்றும், கூட்டணிக்குள் தனது உறுப்பினர் நிலை குறித்தும் பெர்சாத்து RoS-யிடம் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது.

இதனிடையே, சட்டப்பிரிவு 13(2A)-ன் கீழ் மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆர்ஓஎஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெரிக்கத்தான் நேஷனலின் அனைத்து நடவடிக்கைகளும் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு, விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படுவதைத் தடுப்பதுடன், அமைப்பின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பிறப்பிக்கப்பட்டது என ஆர்ஓஎஸ் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஊகங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆர்ஓஎஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News