Oct 24, 2025
Thisaigal NewsYouTube
அம்னோவினால் மிக மோசமாக நடத்தப்படுகிறோம் பிரதமர் அன்வாரிடம் புகார் அளிக்க மஇகா முடிவு
அரசியல்

அம்னோவினால் மிக மோசமாக நடத்தப்படுகிறோம் பிரதமர் அன்வாரிடம் புகார் அளிக்க மஇகா முடிவு

Share:

பாரிசான் நேஷனலின் ஓர் உறுப்புக்கட்சி என்றுகூட பாராமல் அம்னோவினால் தாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் புகார் அளிக்க மஇகா முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்பில் நாளை மறுநாள் புதன்கிழமை பிரதமர் அன்வாருடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒரு சந்திப்பில் அம்னோவிற்கு எதிராக புகார் அளிக்க மஇகா நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மஇகாவை அம்னோ அறவே மதிக்கவில்லை என்றும், ஒரு பொருட்டாக கருதவில்லை என்றும் இதனால் கட்சி தலைமைத்துவம் அம்னோவிற்கு எதிராக மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாக முக்கியத் தலைவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மஇகாவை ஒரு செல்லாக்காசைப் போல் அம்னோ கருதியதால் ஆறு மாநிலங்களுக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கட்சி முடிவெடுத்துள்ளதாக அந்த முக்கியத் தலைவர் கூறிகிறார். இதன் தொடர்பில் வரும் புதன்கிழமை பிரதமர் அன்வாருடன் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு மஇகா ஏற்பாடு செய்துள்ளதாக எவ்.எம்.தி கூறுகிறது.

இந்த சந்திப்பில் பிரதமரிடம் தனது உள்ளக் குமுறல்களை மஇகா கொட்டவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

Related News