Jan 21, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்
அரசியல்

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்

Share:

இன்றிரவு சினார் ஹரியானால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டவுன் ஹால் ராக்யாட்டின் ஐந்தாவது பதிப்பில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கு பதிலளிக்க தமது அமைச்சு தயாராக உள்ளதாக இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.

2050 ஆம் ஆண்டிலேயே பூஜ்ஜிய கார்பன் இலக்குகளை அடைவதற்கான அரசாங்கத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களைத் தெரிவிப்பதற்கான சிறந்த தளமாக இந்த டவுன் ஹால் சந்திப்பு உள்ளது என்று நிக் நஸ்மி குறிப்பிட்டார்.

மக்களுடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி, உரையாடல் நிகழ்த்தி, கருத்துகளை கேட்பதற்கு, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இது அமையும் என்று அவர் கூறினார்.

Related News