ஜன.7-
நஜிப் ரசாக்கிற்கு ஆதரவான பேரணியிக்ல் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் கலந்து கொண்டது 1MDB ஊழலில் அவர்களின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பதை பெர்சாத்து கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. அவர்கள் இன்னும் ஊழலில் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதாகவும், அரச ஆணையின் மீது பொது நலன் கருதியே கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal குறிப்பிட்டார்.
நஜிப் அம்னோவைச் சேர்ந்தவராக இருப்பதால் அல்ல, மாறாக அவர் எதிர்கொள்ளும் நிலைமையையும், அரச ஆணை தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதற்காகவே பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் அப்பேரணியில் கலந்து கொண்டனர் என்று Wan Ahmad Fayhsal விளக்கினார்.
பெரிக்காத்தான் நேஷனல், நீதியின் கொள்கையையும் அரச அமைப்பையும் மதிப்பதாக் கூறிய Wan Ahmad Fayhsalவ் அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற மன்னிப்பு நஜிப்பிற்கும் கிடைக்க வேண்டும் என்பது முதன்மை நிலைப்பாடு என்றார் அவர்.