கெடா, கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்ததான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்ட டெஹ் லேன் ஓங் தோல்விக் கண்டார். கூலிம் தொகுதியில் ஏற்பட்ட நேரடிப் போட்டியில் கெராக்கான் கட்சியை சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் வோங் சியா ஜென் னிடம் 7,742 வாக்குகள் வித்தியாசத்தில் டெஹ் லேன் ஓங் வெற்றி வாய்ப்பை இழந்தார். முதல் முறையாக இத்தொகுதியில் கெராக்கான் வெற்றி பெற்றுள்ளது. டெஹ் லேன் ஓங் கிற்கு 15,536 வாக்குகளும் கெராக்கான் வேட்பாளருக்கு 23,278 வாக்குகளும் கிடைத்தன.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


