ஷா ஆலாம், அக்டோபர்.30-
அம்னோவிற்கு மீண்டும் திரும்புவதை அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் மாலையில் உறுதிப்படுத்தியிருப்பதாக அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.
49 வயதான கைரி, அம்னோவிற்கு திரும்பப் போவதாக ஆருடங்கள் வலுத்து வந்த வேளையில், அம்னோவிற்கு மீண்டும் திரும்பும் தனது நோக்கத்தை கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியிடம் தெரிவித்து இருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்விக் கண்ட கைரி, கட்சியின் தலைவர் அஹ்மாட் ஸாஹிட்டைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து அவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினரால் நீக்கப்பட்டார்.








