Aug 13, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: சமூக ஊடகப் பதிவு தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் மீது குற்றச்சாட்டு
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சமூக ஊடகப் பதிவு தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் மீது குற்றச்சாட்டு

Share:

வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஸ்ரீ தஞ்சுங் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் இஸ்லா வாஹ்யுதி சைனுதீன், தாம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பாக அடுத்த மாதம் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அதிகாரிகள் தம்மைச் சந்தித்தபோது இந்த விவரம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்த மேல் விவரங்களை இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவதாகவும் இஸ்லா வாஹ்யுதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தஞ்சுங் சட்டமன்றத் தொகுதியில் இம்முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

சுயேட்சை வேட்பாளர்களான இஸ்லா வாஹ்யுதி சைனுதீன், ஏ. சரவணன், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜி. ராஜசேகரன், பாரிசான் வேட்பாளர் ஏ. அச்சுதன், பெர்சத்து வேட்பாளர் எம். லெவினிஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்