கோலாலம்பூர், டிசம்பர்.23-
மியன்மாரில், மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்து, அந்நாட்டு இராணுவ ஆட்சிக் குழுவுடன் தொடர்பு கொண்டு விசாரிக்குமாறு, வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசானை சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, Mandalay-இல் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும், 24 வயதான Ko Htet Myat Aung-இன் நிலை குறித்து கேள்வி எழுப்புமாறும் வோங் சென் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை, முகமட் ஹசான் ஒரு தளமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மியன்மார் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரான Ko, இராணுவத்தால் கைது செய்யப்பட்ட போது, துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், வோங் சென் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதே வேளையில், அந்த 24 வயது இளைஞர், இராணுவத்தினரால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படக்கூடும் என மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவான APHR-ம் கவலை தெரிவித்துள்ளது.








