நெகிரி செம்பிலான், லோபாக் பக்காத்தான் ஹராப்பான் ஏற்பாட்டில் நாளை ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் சிரம்பான் சுங் ஹுவா, சீன தொடக்கப்பள்ளி முன்புறமுள்ள மேடான் செலெரா லோபாக் யாம் யாம் 66 உணவு வர்த்தகத் தலத்தில் மாபெரும் அரசியல் பிரசார சொற்பொழிவு நடைபெறவிருக்கிறது.
லோபாக் சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் சியு சேஹ் யோங் முன்னிலையில் நடைபெறும் இந்த மாபெரும் அரசியல் நிகழ்வில் டிஏபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சிறப்பு வருகை புரிவதுடன் அரசியல் எழுச்சி பேருரையையும் நிகழ்த்த வருகிறார்.
இந்த மாபெரும் நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு லோபாக் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் கேட்டுக் கொள்கிறது.








