சிரம்பான், ஆகஸ்ட்.02-
நேற்று நடைபெற்று முடிந்த 16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 36 சட்டமன்றத் தொகுதிகளில், 25 இடங்களை கைப்பற்றி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சியமைத்ததையடுத்து, மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக Juasseh சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் லாசிம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் பதவியேற்றார்.
67 வயதான மூத்த அம்னோ அரசியல் தலைவரான இவர், Kuala Pilah அம்னோ பிரிவுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
Istana Besar Seri Menanti அரண்மனையில், Yang di-Pertuan Besar Tuanku Muhriz Tuanku Munawir முன்னிலையில் அவரது பதவிப் பிரமாணச் சடங்கு இன்று காலை நடைபெற்றது.
முந்தைய மாநில அரசாங்கத்தில், Negri Sembilan அம்னோ தகவல் தொடர்புத் தலைவரான டத்தோ இஸ்மாயில் லாசிம், கல்வி மற்றும் மனித மூலதனத் துறையில் பொறுப்பு வகித்தார்.
மேலும், அவர் Universiti Malaya-வில் சட்டத் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர்.
டத்தோ இஸ்மாயில் லாசிம், Senaling தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 1999 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் கடந்த 2023 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலும் பொறுப்பு வகித்துள்ளார்.
அதேவேளையில், 2018 முதல் 2023 -ஆம் ஆண்டு வரையில் Juasseh தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
நேற்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், Juasseh தொகுதியில் நடைபெற்ற மும்முனைப் போட்டியில், Pakatan Harapan வேட்பாளர் Mohd Aidil Abdullah மற்றும் Bersatu வேட்பாளர் Mohd Zuhaimi Md Yusof ஆகியோரை தோற்கடித்து 6,907 வாக்குகள் முன்னிலையில் Datuk Ismail Lasim வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








