Oct 24, 2025
Thisaigal NewsYouTube
சொந்த முடிவை எடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை
அரசியல்

சொந்த முடிவை எடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை

Share:

டிச.10-

பத்து பூத்தே தீவு சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மலேசியாவின் முடிவை மீட்டுக்கொள்வதற்கு தாம் சொந்தமாக முடிவு செய்ததாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மறுத்துள்ளார்.

அந்த முடிவை எடுத்தது அமைச்சரவையாகும். அந்த அமைச்சரவையில் தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைப்பிரதமர் என்ற முறையில் வீற்றிருந்தார் என்று துன் மகாதீர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அந்த அமைச்சரவையில் அன்வாரின் துணைவியார் மட்டுமின்றி பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக்கட்சிகளின் தலைவர்களாக முகமட் சாபு, அந்தோணி லோக், லிம் குவான் எங், கோபிந்த் சிங் மற்றும் சுல்கிப்ளி அகமட் உட்பட முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாக வீற்றிருந்தனர் என்று துன் மகாதீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்து பூத்தே தீவு தொடர்பான தீர்ப்பில் மலேசிய அரசாங்கம் மேல்முறையீடு செய்வதில்லை என்று அமைச்சரவை கூட்டாக எடுத்த முடிவில், அன்வாரின் துணைவியார் எந்தவொரு ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News