சிலாங்கூர் மாநிலத்திற்கு ஒரு தகுதியில்லாத மந்திரி புசார், நியமிக்கப்பட்டு இருப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் அவமதிப்புச் சொற்களை பயன்படுத்தியதாக கூறப்படும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர், சிலாங்கூர் சுல்தானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் அவர் அவரின் தவற்றை இன்னும் ஒப்புக் கொள்ள வில்லை என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கெடா மந்திரி பெசார் தன்னுடைய தவற்றை ஒப்புக் கொள்ளாமல் தான் பேசிய விஷயத்தை பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நெசனலும் திரித்து விட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றார் என டத்தோ ஶ்ரீ அமிருடின் மேலும் கூறினார். இருப்பினும் போலீசார் தங்களின் விசாரணையை மேற்கொண்டு வருவதால், சனூசி கூறிய விவகாரம் தொடர்பான குற்ற அறிக்கையைப் போலீசார் மிக விரைவில் வெளியிடுவர் என நம்புவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் தெரிவித்தார்.