கோலாலம்பூர், நவம்பர்.10-
சபாவைத் தளமாகக் கொண்ட Upko கட்சி, பக்காத்தான் ஹராப்பானை விட்டு வெளியேகிறது என்று இன்று கோடி காட்டப்பட்டுள்ளது. அதன் தலைவரும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பதவிலிருந்து விலகியவருமான டத்தோ எவோன் பெனெடிக், இன்று நடத்திய கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சபாவின் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டக்கூடிய கூட்டணிகளுடன் மட்டுமே Upko அரசியல் ஒத்துழைப்பை கொண்டு இருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.








