நெகிரி செம்பிலான், பகாவ் சட்டமன்றத் தொகுதியில் தம்மை ஆதரித்து, வெற்றிப்பெற செய்வதன் மூலம் குழிகள் அல்லாத சாலைகள், பிரகாசமான தெருவிளக்குகள் மற்றும் சுத்தமான வடிகால் போன்ற கட்டமைப்பு வசதிகள், தொகுதியில் மேம்படுத்தப்படும் என்று பகாவ் சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹாராப்பன் வேட்பாளராக போட்டியிடும் தியோ கோக் சியோங் உறுதி அளித்துள்ளார்.
தவிர, வெள்ளப் பிரச்னையை சமாளிக்க வடிகால், நீர்ப் பாசன முறை மேம்படுத்தப்படும் என்று தியோ கோக் சியோங் கூறினார்.
பகாவ் - வில் பல வெள்ள்ப் பேரிடர் ஏற்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, தாமான் சாட்டிலைட், பகாவ் ரூமா ராக்யாட், தாமான் ராசா சயாங் போன்ற இடங்கள் திடீர் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என்று தியோ கோக் சியோங் குறிப்பிட்டார்.
அடுத்த 5 ஆண்டுகளில் பகாவ் பகுதியில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னையைத் தீர்க்க ஒரு கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ய தாம் விண்ணப்பித்துள்ளதாக தியோ கோக் சியோங் தெரிவித்தார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


