கோலாலம்பூர், செப்டம்பர்.09-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை நீதிமன்றத்தில் சந்தித்த மஇகா தலைவர்கள் பாரிசான் நேஷனலிருந்து வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
நஜீப் சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்ற வளாகத்தில் டத்தோ ஶ்ரீ நஜிப்பை மஇகாவின் தேசிய தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா தலைவர்கள் சந்தித்தனர். அச்சந்திப்பில் மஇகா, பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறத் தயாராக உள்ளது என அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.