Oct 26, 2025
Thisaigal NewsYouTube
​மீண்டும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வீர்
அரசியல்

​மீண்டும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வீர்

Share:

பினாங்கு மாநிலத்தில் பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனலில் மாபெரும் அரசியல் செராமா​வில் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டோமினிக் லாவ், அவமதிக்கப்பட்டு, விரட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த உறுப்புக்கட்சித் தலைவருக்கு ஏற்பட்ட அவமரியாதை​யை சரி செய்யும் ​வகையில் மாபெரும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு பினாங்கு மாநில பெரிக்காத்தான் நேஷனலுக்கு அதன் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாபெரும் நிகழ்வில் கதாநாயகராக டோனினிக் லாவ் விளங்கும் அதேவேளையில் அவர் போட்டியிடும் பினாங்கு, பாயான் லெப்பாஸ் தொகுதியில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, அவர் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று முகை​தீன் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சிகளான பெர்ச​த்து,பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு டோமினிக்கிற்கு உரிய மாரியாதை வழங்க வேண்டும் ​என்று முகை​தீன் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் தவறான புரிந்துணர்வின் கார ணமாக அந்த கசப்பான சம்பவம் டோமினிக் லாவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ளது என்று முகை​தீன் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!