Jan 16, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக-வுடனான தற்போதைய கூட்டணி இறைவனின் கட்டளை: ஸாஹிட் ஹமிடி
அரசியல்

ஜசெக-வுடனான தற்போதைய கூட்டணி இறைவனின் கட்டளை: ஸாஹிட் ஹமிடி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.16-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் ஒரு போதும் இணைந்து செயல்படப் போவதில்லை என அம்னோ தீர்மானம் நிறைவேற்றி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜசெகவுடன் கூட்டணி அமைத்திருப்பது, "இறைவனின் கட்டளை" என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி Datuk வர்ணித்துள்ளார்.

அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு எதார்த்தமான அணுகுமுறையிலிருந்தே, ஜசெக உடனான தற்போதைய கூட்டணி உருவாகியுள்ளது என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, பொதுத்தேர்தலுக்கு முன்பு, ‘அன்வார் வேண்டாம்; ஜசெக வேண்டாம்’ என்று தான் கூறியிருந்தாலும் கூட, இப்போது ஜசெகவுடன் தமக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பதையும் ஸாஹிட் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதே வேளையில், தற்போதைய அரசாங்கத்தில் ஜசெகவுடன் இணைந்து செயல்படுவது இறைவன் வகுத்த வழி என்று, தற்போது நடைபெற்று வரும் அம்னோ பொதுப்பேரவையின் மத்தியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜசெக உடனான கூட்டணி குறித்து அம்னோ உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுவதையும் ஸாஹிட் நிராகரித்தார்.

Related News

கோபித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு பாரிசான் நேஷனலிலேயே நீடியுங்கள்" - மஇகா மற்றும் மசீச-விற்கு ஸாஹிட் ஹமிடி அழைப்பு

கோபித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு பாரிசான் நேஷனலிலேயே நீடியுங்கள்" - மஇகா மற்றும் மசீச-விற்கு ஸாஹிட் ஹமிடி அழைப்பு

பதவி விலகிய அக்மாலின் ‘மோதல்’ நிறைந்த கருத்துகள்: தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க வேண்டுகிறார் ஸாஹிட்

பதவி விலகிய அக்மாலின் ‘மோதல்’ நிறைந்த கருத்துகள்: தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க வேண்டுகிறார் ஸாஹிட்

டாக்டர் அக்மால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

டாக்டர் அக்மால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

அக்மால் இன்று தனது முடிவை அறிவிப்பார்: ஸாஹிட் ஹமிடி

அக்மால் இன்று தனது முடிவை அறிவிப்பார்: ஸாஹிட் ஹமிடி

சவால்மிக்க அரசியல் சூழலில் நடைபெறும் அம்னோ பொதுப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணையும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள ஸாஹிட் வலியுறுத்து

சவால்மிக்க அரசியல் சூழலில் நடைபெறும் அம்னோ பொதுப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணையும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள ஸாஹிட் வலியுறுத்து

“பெர்சத்துவுடன் கைகோர்க்குமா அம்னோ? ஸாஹிட் ஹமிடியின் அதிரடி சமிக்ஞையும்..... பரபரக்கும் அரசியலும்!" நாளை தொடங்குகிறது அம்னோ மாநாடு

“பெர்சத்துவுடன் கைகோர்க்குமா அம்னோ? ஸாஹிட் ஹமிடியின் அதிரடி சமிக்ஞையும்..... பரபரக்கும் அரசியலும்!" நாளை தொடங்குகிறது அம்னோ மாநாடு