முன்னாள் ஜசெக கட்சியின் தகவல் பரப்பு செயலாளர் தோனி புவா , ஒற்றுமை அரசாங்க கூட்டணியில் இணைந்திருக்கும் கட்சிகள் மீது தவறான கருத்துகளை பதிவு செய்திருக்க கூடாது என அக்கட்சியின் பொது செயலாளர் அந்தோணி லோக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்க கூட்டணி பல்வேறு உடன்பாடுகள் ஏற்று மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதரம் கருதி இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இந்த ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிகள் தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கும் முன் நன்கு சிந்திக்க வேண்டும் என அவர் தெளிவுப்படுதினார்.
கட்சி மற்றும் நாட்டின் சுபிட்சத்தைக் கருத்தில் கொண்டு அளந்து பேச தெரியாத ஜசெக கட்சியின் உறுப்பினர்கள், ஜசெக கட்சியின் பிரச்சார மேடையில் பேச தஜுதியற்றவர்கள் என்ரு அந்தோணி லோக் திட்டவட்டமான் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நேற்று மாலை , பெட்டாலிங் ஜெய MBPJ கட்சியின் நிதி திரட்டும், நிகழ்ச்சியில் பாரிசான் கட்சி ஒரு ஊழல் கட்சி என மேடையில் பேசியிருப்பது அது அவரின் தனிப்பட்ட கருத்து. தோனி புவா தற்பொழுது கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத்ததால் அவரின் கருத்து கட்சியை சார்ந்தது அல்ல என அந்தோணி தெளிப்படுத்தி உள்ளார்.