Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் நடவடிக்கை அறையை திறந்தார் அரிச்சந்திரன்
அரசியல்

தேர்தல் நடவடிக்கை அறையை திறந்தார் அரிச்சந்திரன்

Share:

கெடா, லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் தமது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கும் ஒரு சுயேட்சை வேட்பாளரான சி. அரிச்சந்திரன், வாக்காளர்களை சந்திக்கவும், அவர்களின் பிரச்னைகளை கேட்டறியவும் தமது தேர்தல் நடவடிக்கை அறையை திறந்துள்ளார்.

லூனாஸ் வட்டாரத்தில் ஒரு பகுதியான பாயா பெசார் ரில் தமது தேர்தல் நடவடிக்கை அறையை அரிச்சந்திரன் திறந்துள்ளார். இத்திறப்பு விழா, நேற்று மாலையில் பாயா பெசார், ஶ்ரீ லிமாவ் கடை வரிசையில் ஆதரவாளர்களின் அமோக வரவேற்புடன் நடைபெற்றது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன், ஒரு தூய்மையான தேர்தலை காணவிரும்பும் அதேவேளையில் லூனாஸ் மக்களுக்கு சேவையை வழங்க வேண்டும் என்ற தமது நீண்ட கால லட்சியத்திற்கு இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் தேர்தல் நல்லதொரு களம் அமைத்துக்கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொகுதி மக்களுக்கும் தமக்கும் ஓர் இணைப்பு பாலமாக இருக்கவும், அவர்களின் பிரச்னைகளுக்கு உரிய கவனத்தை செலுத்தவும்,தேர்தல் தொடர்புடைய தமது செயல் நடவடிக்கை குறித்து தொகுதி மக்கள் அறிந்து கொள்ளவும் இந்த தேர்தல் நடவடிக்கை அறை பெரும் துணையாக இருக்கும் என்று அரிச்சந்திரன் குறிப்பிட்டார்.

சாவி சின்னத்தில் போட்டியிடும் ஒரு சுயேட்சை வேட்பாளரான அரிச்சந்திரன், தேர்தல் நடவடிக்கை அறையை திறந்து இருப்பது, மக்கள் மீது அவர் கொண்டுள்ள கடப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்று தொகுதி வாக்காளர்கள் தெரிவித்தனர்.

Related News

தேர்தல் நடவடிக்கை அறையை திறந்தார் அரிச்சந்திரன் | Thisaigal News