Oct 6, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலுக்கு முன் பெரிக்காத்தான் நேஷனலை முடக்க பெர்சத்து முயற்சி – தக்கியுடின்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலுக்கு முன் பெரிக்காத்தான் நேஷனலை முடக்க பெர்சத்து முயற்சி – தக்கியுடின்

பெரிக்காத்தான் நேஷனலை முடக்குவதற்காக பெர்சத்து கட்சி அமைப்புகளின் பதிவு அலுவலகமான RoS-இடம் புகார் அளித்ததாக, பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனல் தாக்கல் செய்துள்ள நீதித்துறை மறுஆய்வு மனுவை ஆதரிக்கும் பிரமாணப் பத்திரத்தில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெர்சாத்து கட்சி ஜூலை 16ஆம் தேதி பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்ட பின்னர் ஆர்ஓஎஸ்ஸிடம் புகார் அளித்ததாக அவர் கூறியுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனலின் பதிவு ரத்து செய்யப்படலாம் என எச்சரித்தும், அதன் பெயரில் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் ஆர்ஓஎஸ் கடந்த செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் அறிவிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க பெரிக்காத்தான் நேஷனலுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மலாக்கா மாநிலத் தேர்தலில் பெர்சாத்து தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதையும் தக்கியுடின் சுட்டிக் காட்டியுள்ளார். பெரிக்காத்தான் நேஷனல் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டால், மலாக்கா தேர்தலில் தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக பெர்சாத்து பகிரங்கமாக தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
முதுகில் குத்தும் வேலையை ஜசெக ஒருபோதும் செய்யாது” – அந்தோணி லோக்

முதுகில் குத்தும் வேலையை ஜசெக ஒருபோதும் செய்யாது” – அந்தோணி லோக்

மலாக்கா தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் பெர்சாத்து; கூட்டணிக்குத் தயார்

மலாக்கா தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் பெர்சாத்து; கூட்டணிக்குத் தயார்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரம்: துவாங்கு முஹ்ரிஸை நீக்கிய முடிவில் ஆட்சியாளர்கள் குழு உறுதி

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரம்: துவாங்கு முஹ்ரிஸை நீக்கிய முடிவில் ஆட்சியாளர்கள் குழு உறுதி

மலாக்கா தேர்தல்: மெம்பான், சுங்கை ஊடாங் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற பெர்சாத்து உறுதி

மலாக்கா தேர்தல்: மெம்பான், சுங்கை ஊடாங் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற பெர்சாத்து உறுதி

மலாக்கா தேர்தலில் எதிரணிக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் பாரிசான்: பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸாஹிட் தகவல்

மலாக்கா தேர்தலில் எதிரணிக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் பாரிசான்: பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸாஹிட் தகவல்

மலாக்கா தேர்தலில் பாரிசான் சின்னத்தை பாஸ் பயன்படுத்த தடையில்லை - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா தேர்தலில் பாரிசான் சின்னத்தை பாஸ் பயன்படுத்த தடையில்லை - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு