6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியை சார்ந்தவர்களும், அக்கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் நன்னெறி பண்புகளை மீறி விடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 3 வேட்புமனுத்தாக்கல் மையங்களுக்கு இன்று காலையில் வருகை தந்த பிரதமர், நடப்பு சூழ்நிலையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியம் அல்ல. ஒரு வேட்பாளர் என்ற முறையில் நிர்ணியக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நன்னெறி பண்புகளை மீறிவிடாமல் மிக ஆரோக்கியமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
